நித்திரவிளை , டிச- 24
கேரள மாநிலத்திலிருந்து இறைச்சி, மீன், மருத்துவக் கழிவுகள் தமிழகப் பகுதியில் கொண்டு வருவது வாடிக்கையாக உள்ளது. இதை தடுக்க குமரி கேரள எல்லையில் உள்ள சோதனை சாவடி போலீசாருக்கு மாவட்ட எஸ்பி உத்தரவிட்டுள்ளார். அதே வேளையில் சோதனை சாவடி இல்லாத பகுதிகள் வழியாக கேரளாவில் இருந்து தற்போது கழிவுகள் மாவட்டத்திற்குள் வந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் இன்று (23-ம் தேதி) அதிகாலை நித்திரவிளை சந்திப்பு வழியாக இறைச்சி கழிவை ஏற்றிக்கொண்டு ஒரு கண்டெய்னர் லாரி வந்துள்ளது. அதை களியக்காவிளை இன்ஸ்பெக்டர் பாலமுருகன் என்பவர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, தேரூர் பகுதியில் உள்ள ஒரு பன்றி பண்ணைக்கு கொண்டு செல்வதாக டிரைவர் கூறி உள்ளார்.
இதே அடுத்து வாகனத்தை ஓட்டி வந்த வடசேரி பகுதியை சேர்ந்த விஷ்ணு (33) என்பவரை கைது செய்து, வாகனத்தையும் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் பறிமுதல் செய்து, நித்திரவிளை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.