குளச்சல், பிப்- 28
மணவாளக்குறிச்சி அருகே ஆண்டார் விளை பகுதியை சேர்ந்தவர் நெல்சன். வெளிநாட்டில் கட்டிட வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நிஷா (30). இவர்களுக்கு ஜீவன் (5) உட்பட இரண்டு மகன்கள் உண்டு. நேற்று ஜீவன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நிஷா வீட்டிற்கு வெளியே தேடிப் பார்த்தார். ஆனால் எங்கேயும் ஜீவன் கிடைக்கவில்லை.
இதையடுத்து வீட்டுக்கு அருகே உள்ள ஒரு தென்னை தோப்பில் உள்ள கிணற்றில் பார்த்தபோது ஜீவனின் செருப்பு மிதந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த நிஷா தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பேச்சு மூச்சு இல்லாத நிலையில் கிணற்றில் கிடந்த ஜீவனை மீட்டனர்.
தொடர்ந்து சிறுவனை குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு ஜீவனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து நிஷா கொடுத்த புகாரின் பேரில் மனவளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.