ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆக:11
விருதுநகர் மாவட்ட
தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சார்பில் உயர் கல்வி பயிலும் மாணவர்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கு உருவளிக்கும் முகாம் விருதுநகர் மாவட்டம் கலசலிங்கம்பல்கலையில் வேந்தர் முனைவர் கே.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.
துணைவேந்தர் முனைவர் நாராயணன், துவக்கிவைத்தார்.
பதிவாளர் முனைவர் வே.வாசுதேவன்,
இடிஐஐ – மாநில திட்ட மேலாளர் சண்முகராஜ் பல்கலை புத்தாக்க இயக்குனர் முனைவர் டேனி ஆகியோர் சிறப்புரையாற்றினர். முதன்மைப் பயிற்றுனர் முனைவர்இராமச்சந்திரன், உருவளிக்கும் முகாம் பற்றி விளக்கி பயிற்சி வழங்கினார்.
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தொழில்முனைவோர் விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் பயிற்சிகளை பள்ளி மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களிடையே புத்தாக்கம் மற்றும் தொழில்முனைதல் சிந்தனையை உருவாக்கும் வகையில் நடத்திவருகிறது. மேலும் ஆண்டுதோறும் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கிடையே புத்தாக்க கண்டுபிடிப்பு போட்டிகள் நடத்தி சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு ரொக்க பரிசுகள் வழங்கிவருகிறது.
இந்த ஆண்டு இப்போட்டிக்கான விண்ணப்பங்கள் 9355 மாணவர் அணிகளிடமிருந்து வரப்பெற்று, முதல்கட்ட ஆய்விற்குப் பின்னர் 474 அணிகள் தேர்வு செய்யப்பட்டு, ஒருநாள் பயிற்சி வழங்கப்படுகிறது என்றார், இயக்குநர் டேனி.
இடிஐஐ மாவட்ட ஒருங்கினைப்பாளர் பொன்வேல் முருகன் நன்றி கூறினார்.