கருங்கல், டிச-1
கருங்கல் அருகே நெல்லிக்காட்டு விளையை | சேர்ந்தவர் பர்ணபாஸ் மகள் மேரி புனிதா. இவருக்கு திருமணமாகி கணவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். குழந்தைகள் இல்லை. தாயாருடன் வசித்து வருகிறார்.
அழகு கலை படிப்பு முடித்துள்ள இவர் திருமண விழாவில் மணப்பெண்களுக்கு அலங்காரம் செய்வது வழக்கம். நேற்று ஒரு வீட்டில் திருமண அலங்காரப் பணிக்கு செல்வதாக மேரி புனிதா தனது தாயாரிடம் கூறிவிட்டு சென்றார். அப்போது இரண்டு நாட்கள் அங்கு பணி உள்ளதாகவும், எனவே இரவு அங்கே தங்கி விடுவதாக கூறியுள்ளார்.
ஆனால் இரண்டு நாட்கள் கடந்த பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்ஃபோனுக்கு தயார் அழைத்தபோது போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. பல இடங்களில் தேடியும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து கருங்கல் போலீசில் பர்னபாஸ் புகார் செய்தார். புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.