நாகர்கோவில் – நவ- 19,
கன்னியாகுமரி மாவட்டம் என்.ஜி.ஒ. காலணி பகுதியை சேர்ந்த 9 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் சுஷ்மித் புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் சுசீந்திரம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் தன் இருக்கையில் அமர வைத்து ஆசிரியர் மாணவனுக்கு அறிவுரை கொடுத்து அனுப்பியது போன்ற சம்பவம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்து NGO காலணி அருகே காமராஜர் சாலையில் வசித்து வருபவர் காலஞ்சென்ற தங்கராஜ் மனைவி மங்களேஷ்வரி இவருக்கும் இவர் கனவரின் உறவினர்களான சுதன், விமல் ஆகியோருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தது இந்நிலையில் மங்களேஷ்வரியின் மகன் சுஷ்மித் வயது ( 14 ) இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளி கூடத்தில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார் .. இந்நிலையில் பள்ளி கூடம் முடிந்து வந்ததும் ஏற்கனவே தாயுடன் பகையில் இருந்து வரும் உறவினர்களான 35 வயது மிக்க சுதன், மற்றும் விமல் ஆகியோருடன் வயது வித்தியாசம் இன்றி அவர்களுடன் சுற்றி வந்தான் .. தாயுடன் பகையில் இருக்கும் சுதன், விமலுடன் மகன் சுஷ்மித் ஊர்சுத்த கூடாது என தாய் விலக்கியும் மகன் கேட்க வில்லை எனவே இது சம்பந்தமாக தாய் மங்களேஷ்வரி சுசீந்திரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ஆதாம் அலி மாணவன் உட்பட இரு தரப்பினரையும் காவல் நிலைத்திற்கு வரவழைத்து விசாரணை செய்தார் . 35 வயது மிக்கவர்களுடன் 14 வயது சிறுவன் சுற்ற கூடாது உன் வயதுக்குரியவர்களிடம் சுற்ற வேண்டும், தற்போது படிப்பில் தான் கவனம் செலுத்த வேண்டும், அம்மா சொல்படி கேட்டு வளரவேண்டும் நன்றாக படித்து என்னை போல காவல்நிலையத்தில் போலீஸ் அதிகாரியாக பிற்காலத்தில் வர வேண்டும் என ஆய்வாளரின் இருக்கையில் மாணவனை உட்கார வைத்து ஆய்வாளர் ஆதாம் அலி எழுந்து நின்று ஆய்வாளர் போல் இல்லாமல் ஒரு ஆசிரிரியரை போல அறிவுரைகள் வழங்கினார் .. காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த 9 ஆம் வகுப்பு பள்ளி மாணவனை ஆசிரியரை போல அறிவுரை வழங்கிய காவல் ஆய்வாளர் ஆதாம் அலி மாணவரிடம் நடந்து கொண்ட விதங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.