திண்டுக்கல் மே:27
திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே உள்ள ராஜராஜேஸ்வரி மருத்துவமனையில் தலைச்சுற்றல், மயக்கம், சுயநினைவு இழத்தல் முதலிய உபாதைகளால் சிரமத்திற்கு உள்ளான 74 வயது முதியவர் ஒருவர்க்கு இதய துடிப்பு குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.அதனைத் தொடர்ந்து இருதய நோய் சிறப்பு நிபுணர் டாக்டர்.எஸ்.சபரிராஜன் மருத்துவ குழு தலைமையில், ராஜராஜேஸ்வரி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர்.பி. விக்னேஷ்ராஜ் ஆகியோர் அவருக்கு பேஸ்மேக்கர் கருவி மூலம் திண்டுக்கல் ராஜராஜேஸ்வரி மருத்துவமனையில் தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பொருத்தப்பட்டது.இது ராஜராஜேஸ்வரி மருத்துமனையின் ஓராண்டு வெற்றிப்பயணத்தின் மேலும் ஒரு மைல்கல் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் இதயத்துடிப்பு குறைபாடு உள்ளவர்களுக்கு பேஸ்மேக்கர் கருவி இடது தோள்பட்டைக்கு கீழ் பெரும்பாலும் பொருத்தப்படும். எப்போதெல்லாம் இதய துடிப்பு குறைகிறதோ, அப்போதெல்லாம் இக்கருவி ஒரு மோட்டார் போல செயல்பட்டு துடிப்பை செம்மை படுத்த உதவுகிறது என தெரிவித்தனர்.