பிப்:2
திருப்பூர் காங்கேயம் சாலையைச் சேர்ந்தவர் அக்பர் இவர் ஏழாம் வகுப்பு வரை படித்து உள்ளார். சிறுவயதிலேயே இஸ்லாமியர்களின் புனித நூலான திருமறைக் குர்ஆனை எழுத வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் உலகத்தில் உள்ள அனைவரும் வீடுகளில் முடங்கி இருந்த நிலையில் இஸ்லாமியர்களின் புனித நூலான திருமறைக் குர்ஆனை எழுத வேண்டும். என்ற ஆர்வத்துடன் தனது சொந்த முயற்சியில் 28 இன்ச் அகலமும் 40 இன்ச் உயரமும் கொண்ட வெள்ளை நிற லெதர் போர்டில் கருப்பு நிற வாட்டர் கலர் கொண்டு ஓவியர்கள் எழுதக்கூடிய பிரஷ் பயன்படுத்தி தனது வீட்டில் ஒரு அறையில் அமர்ந்து தினமும் காலை இரண்டரை மணி நேரம் எழுதுவதற்கு என நேரம் ஒதுக்கி 13 வரிகளையும் 484 பக்கமும் கொண்ட
திருக்குர்ஆனை மூன்று வருட காலமாக எழுதி முடித்து உள்ளார். இந்த நிலையில் எழுதி முடித்த திருக்குர்ஆனை பொதுமக்களுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் திருப்பூர் வட்டார ஜமாஅத்துல் உலமா தலைமையில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களைக் கொண்டு சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது மேலும் குர்ஆனை தனது கையால் எழுதி வடிவமைத்த அக்பர் கான் கூறுகையில் மற்ற எழுத்துக்கள் எல்லாம் இடதுபுரத்திலிருந்து வலது புறமாக எழுதக்கூடிய எழுத்தாகவும் இந்த அரபி எழுத்துக்கள் என்பது வலது புறத்திலிருந்து இடது புறமாக எழுதக்கூடியது என்பதும் தனக்கு அரபி எழுத்தை எழுத ஆரம்பித்த பிறகு தான் திருக்குர்ஆனை கற்றதாகவும் விரைவில் எழுத்துப் பிழைகள் எல்லாம் சரி செய்த பிறகு மக்களின் பார்வைக்காக இந்த திருக்குர்ஆனை வைக்கப் போவதாகவும் தெரிவித்தார் மேலும் குர்ஆனை படிப்பது என்பது வேறு எழுதுவது என்பது வேறு குர்ஆனை எழுதிக் கொண்டே 58 வயதில் முழு குர்ஆனையும் படித்து அதை தனது கைகளால் எழுதி வடிவமைத்துள்ள அக்பர் என்பவரை பல்வேறு பகுதிகளில் இருந்தும் இஸ்லாமியர்கள் வந்து வாழ்த்து கூறி செல்கின்றனர்.