சென்னை ஆகஸ்ட் .09
எம்.ஜி.எம் .ஹெல்த்கேர் மருத்துதுமனையில் அபூர்வமான மூளைக்கட்டி அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்திருக்கிறது.
அந்தமானை சேர்ந்த 51 வயதான பெண்மணி கோமா நிலைக்கு சென்றார். மருத்துவ பரிசோதனை முடிவில் அவருக்கு மண்டை ஓட்டுக்கு அடிப்பகுதியில் மூளைக்கு இரத்த ஓட்டம் செல்லும் ரத்த நாளங்களை அது பாதிப்படைய செய்திருந்தது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் கட்டியை அறுவை சிகிச்சையின் மூலம் வெற்றிகரமாக அகற்றி மருத்துவ வரலாற்றில் ஒரு புதிய மைல் கல்லாக கருதப்படுகிறது.
இந்த அபூர்வமான மருத்துவ செயல்முறை எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனைக்கு பெருமைக்குரிதாகும்.
எம்.ஜி.எம் ஹெல்த்கேர் – ன் நரம்பியல் அறுவை சிகிச்சை துறையின் இயக்குனர் டாக்டர். ரூபேஷ் குமார் வழிகாட்டலில் இயங்கிய மருத்துவர்கள் குழுவில் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களான டாக்டர். எல்.எஸ் ஹரீஷ்சந்திரா மற்றும் டாக்டர். சரண்யன் மற்றும் நரம்பியல் சார்ந்த மயக்க மருந்தியல் நிபுணர் டாக்டர். அருள்செல்வன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
எம்.ஜி.எம் ஹெல்த்கேர் – ன் நரம்பியல் அறுவை சிகிச்சை துறையின் இயக்குனர் டாக்டர். ரூபேஷ்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
அந்த நோயாளி நினைவுத் திறனிழந்த கோமா நிலையில் அந்தமானில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனையிலிருந்து சென்னை, எம்.ஜி.எம் ஹெல்த்கேர் -க்கு விமானத்தின் மூலம் சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டிருந்தார்.
இங்கு வந்து சேர்ந்தவுடன் நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவதற்கு ஒரே வாய்ப்பாக கருதப்பட்ட அவசரநிலை மூளைக்கட்டி அகற்றல் அறுவை சிகிச்சையை செய்ய மூளை நரம்பியல் அறுவைசிகிச்சையியல் துறை நிபுணர்கள் முடிவு செய்தனர்.
கட்டியைச் சுற்றியிருந்த இரத்தநாளங்களுக்கு பாதிப்பில்லாமல், அவற்றை தக்கவைக்கும் விதத்தில் இந்த அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்றார்.
மிக நவீன மருத்துவ சாதனங்கள் தொழில்நுட்ப வசதிகளுடன் உரிய நேரத்தில் சிறந்த சிகிச்சையை வழங்கிய எம்.ஜி.எம் ஹெல்த்கேர் நிர்வாகத்தை நோயாளியின் குடும்பத்தினர் பாராட்டி தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.