குலசேகரம், நவ-30
திருவட்டாறு பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ். விவசாயியான இவருக்கு மனைவியும் ரெண்டு பிள்ளைகளும் உள்ளனர். மகனும் மகளும் திருமணமாகி இருவரும் வெளிநாட்டில் வசித்து வருகிறார்கள். இதில் மகளின் . இரண்டு வயது குழந்தை இலா என்பவர் ஜேம்ஸ் பராமரிப்பில் வசித்து வருகிறார்.
நேற்று மாலை ஜேம்ஸ் மனைவி தனது பேத்தி இலாவை அழைத்துக் கொண்டு கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பள்ளி வேன் ஒன்று திடீரென்று குழந்தையின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிறுமி இலாவை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக ஜேம்ஸ் கொடுத்த புகாரின் பேரில் தனியார் பள்ளி வேன் ஓட்டுநர் மாத்தூர் பகுதி சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் மீது திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.