தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாட்டத்தூர் பொதிகை சேர்ந்தவர் சண்முகம் மகன் அய்யனார் (42)
சுமை தூக்கும் தொழிலாளி. அய்யனாருக்கு கிருஷ்ணம்மாள் மனைவியும், வினித் குமார் என்ற ஒரு மகனும் உள்ளனர். வினித் குமார் வீரசிகாமணியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் +2 படித்து வருகிறார். அய்யனார் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவேங்கடம் சாலையில் மூட்டைகளை ஏற்றி இறக்கும் போது மூட்டை அய்யனார் மீது சரிந்து விழுந்தது. இதில் காயம் அடைந்த அய்யனார் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அங்கு சிகிச்சை பலனின்றி அய்யனார் பரிதாபமாக உயிரிழந்தார். மூட்டைத் தூக்கும் தொழிலாளி அய்யனார் இறந்த தகவலை கேட்டதும் அவரது குடும்பத்தினர் கதறி அழுத காட்சி கல் நெஞ்சையும் கரைப்பதாக இருந்தது. தற்சமயம் +2 அரசு பொதுத்தேர்வு நடைபெற்று வருவதால் +2 வகுப்பு மாணவர் வினித் குமாரை அங்குள்ள பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் ஆறுதல் கூறி தேர்வு எழுத வழி அனுப்பி வைத்தனர். தந்தை இறந்த நிலையில் மகன் பிளஸ் டூ தேர்வு எழுத சென்றது சமூக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தந்தை இறந்த நிலையில் தேர்வு எழுதிய +2 மாணவர்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics