திண்டுக்கல்
ஜீன்:01
திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை மூலம் குழந்தை திருமணம் தொடர்பான பயிற்சி பட்டறை புதுடில்லியில் நடைபெற்றது. இதில் அமைதி அறக்கட்டளை தலைவர் பா.ரூபபாலன் மற்றும் 22 மாநிலங்களில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் 2024 -2025 ஆண்டுக்கானசெயல் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதன் மூலம் ஒற்றுமை மற்றும் உறுதிப்பாட்டின் வெளிப்பாடாக நாடு முழுவதும் சுமார் 200 தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அதன் பிரதிநிதிகள் குழந்தை திருமணம் இல்லா இந்தியா பிரச்சாரத்தில் 2024 ஆண்டுக்காண செயல் திட்டத்தினை உருவாக்க ஒன்று கூடினர். 2022 -இல் தொடங்கப்பட்ட இந்த கூட்டமைப்பு 17 மாநிலங்களிலுள்ள 300 மாவட்டங்களில் பணிபுரிந்த 161 தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் இருந்து இப்பொழுது 22 மாநிலங்களை சென்று அடைகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் குழந்தை திருமணத்தை தடுத்தலில் பங்கேற்கும் அதிகாரிகள் மற்றும் கிராம தலைவர்களுடன் தொடர்ந்து பணியாற்றுவோம்.நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகள் ஒன்றாக அமர்ந்து தங்களது வெற்றிகள் மற்றும் அனுபவங்கள், சவால்களை இப்பயிற்சியில் பகிர்ந்து கொண்டனர்.