நாகர்கோவில் ஜூன் 1
தமிழகத்தின் கிழக்கு ஆழ்கடல் பகுதிகளில் விசைப்படகுகளுக்கு மீன்பிடி தடைகாலம் அமலில் இருந்து வரும் நிலையில் அரபிக்கடல் பகுதிகளில் 61 நாட்கள் மீன்பிடித்தடை காலம் நேற்று நள்ளிரவு முதல் தொடங்குகிறது. இதனால் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் முதல் கேரளா உட்பட குஜராத் வரை உள்ள பகுதியில் உள்ள விசை படகுகளை கரை ஒதுக்கி வருகின்றனர்.
ஆழ்கடலில் உள்ள விசை படகுகள் இன்று மாலைக்குள் குளச்சல் மீன் பிடித்துறை முகத்திற்கு வந்து சேர்ந்து விடுவார்கள் என மீன் வளத்துறையின் தகவல் தெரிவித்தனர்.
மீன்களின் இனப்பெருக்க காலம் என வரையறுக்கப்பட்டு 61 நாட்கள் விசை படகுகளில் சென்று மீன் பிடிக்க விசைப்படகுக்கு தடைகாலம் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் கிழக்கு ஆழ்கடல் பகுதிகளான கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் முதல் சென்னை வரை கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி மீன்பிடி தடைகாலம் தொடங்கியது. எதிர்வரும் ஜூன் 15ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் அரபிக் கடல் பகுதிகளில் மீன் பிடித்தடைக் காலம் ஜூன் ஒன்றாம் தேதி நேற்று நள்ளிரவில் இருந்து தொடங்குகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டிணம், நீரோடி மற்றும் கேரளா உட்பட குஜராத் வரை அரபிக்கடல் பகுதிகளில் உள்ள விசைப்படகுகள் அனைத்தும் கரை ஒதுக்கப்பட்டு வருகின்றன. ஜூன் ஒன்றாம் தேதி நள்ளிரவில் தொடங்கும் இந்த மீன்பிடி தடைகாலம் ஜூலை 31 ஆம் தேதி வரை 61 நாட்கள் கடைபிடிக்கப்படுகிறது குளச்சலில் உள்ள 300 விசைப்பல்களும் கரை ஒதுக்கப்பட்டுள்ளன. ஆழ்கடலில் தங்கி மீன்பிடி தொழில் செய்யும் விசைப்படகுகள் கரை திரும்பியுள்ளன அவை அனைத்தும் மாலைக்குள் துறைமுகத்தில் வந்து கரை ஒதுக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.