நாகர்கோவில் – ஜூன் – 02,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெஸ்டின் தலைமையில், மண்டல செயலாளர் பெல்வின் ஜோ, விளவங்கோடு மாவட்ட செயலர் சதிஷ், பத்மநாபபுரம் மாவட்ட சீலன் செயலாளர் நூற்றுக்கும் மேற்ப்பட்ட நிர்வாகிகள் மனு அளிக்க வந்திருந்தனர் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது.
திருச்சி சூர்யா என்பவர் 5 தமிழ் யுடியூப் நடத்தி வருகிறார். இதில் அவர் பேட்டி கொடுக்கிறேன் என்ற பெயரில் பல நாட்கள் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் அவர்களை பற்றி அவதூறாகவும், ஆபாசமாகவும் பொய்யான கட்டுக் கதைகளை மக்கள் மத்தியில் பரப்பி வருகிறார். இதனால் மக்கள் மத்தியில் இவர்களது நன்மதிப்பை கெடுக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் தொடர்ந்து பேசி வருகிறார். மேலும் பெண்மையை கலங்கப்படுத்தும் வகையிலும் பெண்களை தரக்குறைவாகவும் பேசி வருகிறார். இந்நிலையில் 2024 மே மாதம் 28ம் தேதி மாலை 4:33 மணிக்கு மீண்டும் பேட்டி என்ற பெயரில் மறைந்த முத்துக்குமார் அவர்களின் மனைவியை தரக்குறைவாக பேசி பெண்மைக்கு இழிவு ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். எனவே இவரால் சமுதாயத்தில் மேற்குறிப்பிடபட்டுள்ளவர்களின் நன்மதிப்பு, நற்பெயர், மரியாதையும் கெடுத்து வருகிறார். எனவே அவதூறுகளை பரப்பியும், பெண்மையை இழிவுப்படுத்தி பேசியும் சமூகவலைதளங்களில் வெளியிடும் இவர் மீது சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்குமாறு கூறப்பட்டுள்ளது.