வேலூர்_02
வேலூர் மாவட்டம் ,கே. வி .குப்பம் வட்டம், மேல் காவனூர் கிராமத்தில் நடைபெற்ற ஸ்ரீ கெங்கை அம்மன் ஆலய சிரசு ஏற்றும் திருவிழாவில் கெங்கை அம்மனுக்கு காப்பு கட்டுதல் கரக ஊர்வலம் ,அருள்மிகு ஸ்ரீ காவிநாச்சி அம்மன் திருவீதி உலா, மங்கள வாத்தியம் முழங்க ஸ்ரீ கெங்கை அம்மன் சிரசு ஊர்வலம் வானவேடிக்கையும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சிரசு ஏற்றும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது .இதில் மேல்காவனூர் கிராமம் திருவிழா குழுவினர்கள், ஊர் பொதுமக்கள், மற்றும் இளைஞர்கள், பக்தர்கள், பலர் கலந்து கொண்டனர்.