திருப்பூர் ஜூன்: 2
ஜூன் ஒன்றாம் தேதி நமது பத்திரிக்கையில் வெளியிட்ட செய்தி
திருப்பூர் ஊத்துக்குளி ரோடு பாலைக்காடு அருகே ரயில்வே மேம்பாலம் சமீபத்தில் திறக்கப்பட்டது இரவில் பாலத்தில் மின்விளக்குகள் சரிவர எறிவது இல்லை அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்துள்ளனர் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது மேலும் அப்பகுதியைச் சேர்ந்த பனியன் தொழிலாளர்கள் பணி முடிந்து பாலம் வழியாக செல்ல அச்சமடைகின்றனர் இருளை பயன்படுத்தி சமூக விரோத செயல்கள் நடைபெறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இரவு நேரத்தில் மது பிரியர்களின் தொல்லையும் அதிகரித்து வருகிறது எனவே மேம்பாலத்தில் இரவில் மின் விளக்குகள் எரிவதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொது பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.