நாகர்கோவில் மே 31
கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபட்டார்.கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் பிரதமர் நரேந்திரமோடி 3 நாட்கள் தியானம் செய்ய உள்ளார். இதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து தனி ஹெலிகாப்டர் முலமாக புறப்பட்டு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிபேட் தளத்தில் வந்து இறங்கினார்.சிறிது நேரம் அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுத்த பின்பு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையிலிருந்து கார் மூலமாக கன்னியாகுமாரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். பகவதி அம்மன் கோயிலில் தரிசனம் முடித்த பின் கடல் நடுவே அமைத்துள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்ல பூம்புகார் படகு போக்குவரத்துக்கு கழகத்தின் தனி படகில் விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்றார். 30 ஆம் தேதி அதாவது நேற்று மாலை தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 45 மணி நேரம் தியானம் மேற்கொள்ள உள்ளார்.