சிவகங்கை நகரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பெயரளவில் தான் செயல்படுகிறது என விளையாட்டு வீரர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள் இது குறித்து கூறியிருப்பதாவது
இங்கு நடைபெறும் விளையாட்டு பாடப்பிரிவுகளில் நான்கு பாடப்பிரிவுகளுக்கு நிரந்தர பயிற்சியாளர் இல்லை மாணவர்களுக்கு உறுதியான மற்றும் நிரந்தரமான பயிற்சி என்பது கிடைக்காமல் போய்விட்டது
இந்த விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் ஏற்கனவே இயங்கி வந்த ஆலோசனைக் கமிட்டியும் இல்லாமல் போய்விட்டது இதனால் ஆணையத்தின் வளர்ச்சியில் எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு உள்ளே செல்லும் தார்ச்சாலை முற்றிலுமாக சேதமடைந்து விட்டது.
மேலும் விளையாட்டு மைதானம் சரியாக பராமரிக்கப்படாததால் ஆங்காங்கே தேவையற்ற செடி கொடிகளும் முளைத்து விளையாடும் மாணவர்களுக்கு இடையூறாய் உள்ளது இங்குள்ள விடுதியில் போதிய மாணவர்கள் தங்கவில்லை நீச்சல் குளத்தின் மேல்ப்பகுதியில் உடைந்து விரிசல் விட்டு காணப்படுகிறது கால்பந்து விளையாட்டு மைதானத்தில் வலைகள் சேதம் அடைந்து மாதக் கணக்கில் பயனற்று கிடைக்கிறது
இங்கு பயிற்சி பெறும் மாணவர்களின் வெற்றிச் சாதனை என்பது தேசிய மற்றும் மாநில அளவில் ஒப்பிடும் போது அவை மிகவும் குறைவுதான் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
எனவே விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஆணையம் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள்.
மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.