தேனி மாவட்டம், மே – 30
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சுப்பிரமணி என்பவர் மதுரையை சேர்ந்தவர் சுப்பிரமணி ஆண்டிபட்டி அருகில் தேக்கம்பட்டியில் தனக்கு சொந்தமான இடத்தில் பெட்ரோல் பங்க் வைப்பதற்கான வேலையை சில மாதங்களாக செய்து வருகிறார் பெட்ரோல் பங்க் வைப்பதற்கான தடையில்லா சான்று வழங்குவதற்காக வருவாய்துறையிடம் விண்ணப்பித்துள்ளார் ஆண்டிபட்டி வட்டாட்சியர் காதர் ஷெரிப் நடையில்லா சான்று வழங்க 1 – இலட்சம் பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது அதனை தொடர்ந்து சுப்பிரமணி தேனி இலஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சுந்தர்ராஜனிடம் புகார் அளித்துள்ளார் புகாரின் அடிப்படையில் வட்டாட்சியர் காதர் ஷெரிப் கையும் காலுமாக கைது செய்ய போலீசார் முடிவு செய்து சுப்பிரமணிடம் ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் ஒரு இலட்சத்தை கொடுத்து அனுப்பினர் பணத்தை சுப்பிரமணி வட்டாட்சியரிடம் கொடுத்த போது இலஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கையும் காலுமாக பிடித்து டிஎஸ்பி சுந்தர்ராஜன் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட போலீசார் தாசில்தார் அறைக்குள் சென்று சோதனை நடத்து அவரை விசாரித்தனர் விசாரணையில் போது வட்டாட்சியர் அவர்களுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது இதனை தொடர்ந்து வட்டாட்சியரை போலீஸ் வாகனத்தில் ஏற்றி மருத்துவ சிகிச்சைக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் தேனி இலஞ்ச ஒழிப்புத்துறை போலிசார் தொடர்ந்து வட்டாட்சியரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் இச்சம்பவம் மற்ற அரசு அலுவலர்கள் பொதுமக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
ரூபாய் ஒரு இலட்சம் லஞ்சமாக பெற்ற ஆண்டிபட்டி தாசில்தார்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics