திண்டுக்கல் மே:30
திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு வீரர்கள் யூனியன் சார்பில் ஏழை, எளியோர் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு வீரர்கள் யூனியன் தலைவர் ஏ.வி. முகமதுசுல்தான் கலந்து கொண்டு ஹாக்கி சங்க நிறுவனர் மனிதநேயம் வி.ஞானகுருவிடம் வி.ஜி. விளையாட்டு அகாடமி அலுவலகத்தில் வழங்கினார். இவர்களை திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவர் நாட்டாண்மை டாக்டர்.என்.எம்.பி.காஜாமைதீன், மாவட்ட ஹாக்கி சங்கத் துணைத்தலைவர் ரமேஷ்பட்டேல், மாவட்ட கேரம் சங்கத் தலைவர் சுவாமிநாதன், மாவட்ட கால்பந்து சங்க செயலாளர் எஸ்.சண்முகம், மாவட்ட ஹேண்பால் சங்க செயலாளர் என்.ராஜசேகரன், மாவட்ட வூசு சங்க செயலாளர் ஜாக்கி சங்கர், மாவட்ட குத்துச் சண்டை செயலாளர் வெ.ராஜகோபால், மாவட்ட யோகா சங்க செயலாளர் நித்யா ஆகியோர் வாழ்த்தி பாராட்டினார்கள்.
வி.ஜி. விளையாட்டு அகாடமி அலுவலகத்தில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்
Leave a comment