நாகர்கோவில் மே 29
குமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் உணவளிக்கும் விதமாக சமபந்தி விருந்து நடைபெற்றது.
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயின் உத்தரவின்படி தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி.ஆனந்த் வழிக்காட்டுதலின் படி கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைவர் சிவா முன்னிலையில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி தலைவர்/ஒருகிணைப்பாளர் ஜில்லா ராஜேஷ் தலைமையில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் அசைவ சமபந்தி விருந்து காலை தொடங்கப்பட்டது. அதன் பின் நாகர்கோயில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அண்ணா பேருந்து நிலையம், கோட்டார் ரயில் நிலையம் போன்ற பகுதிகளில் உள்ள ஏழை மக்களுக்கு மதியம் உணவு வழங்கப்பட்டது. அதன் தொடர்சியாக கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுசீந்தரம் மற்றும் மருங்கூர் பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு மதிய வழங்கப்பட்டது. இதில் மாவட்ட பொருளளார் சலீம் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தலைவர் ஆல்வின் ரேகு அபி தொழிலாளர் அணி தலைவர் யோகநாத் ராமபுரம் தலைவர் செல்வன் மற்றும் மாவட்ட,நகர,ஒன்றிய,பகுதி, நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.