மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஊராட்சியில் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திமுக இளைஞர் அணி சார்பில் கலைஞர் நூலகம் திறப்பு விழா மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மருது தலைமையில் நடைபெற்றது. இந்த நூலகத்தில் டாக்டர் கலைஞரின் காலத்தால் அழியா அழியாத காவியங்களான நெஞ்சுக்கு நீதி, குறளோவியம், கலைஞரின் கடிதங்கள் உள்ளிட்ட ஏராளமான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த நூலகத்தை திமுக மாவட்ட செயலாளர் நிவேதா எம் முருகன், திமுக இளைஞர் அணி மாநில துணை செயலாளர் இளையராஜா ஆகியோர் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் மயிலாடுதுறையை அடுத்த பல்லவராயன்பேட்டை நரிக்குறவர் குடியிருப்பில் வசிக்கும் நரிக்குறவர் சமுதாய மாணவர்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்த 9 பேருக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து நூலகத்தின் உள்ளே சென்ற நரிக்குறவ மாணவர்கள் புத்தகங்களை எடுத்து படித்தனர். அப்போது நீங்கள் எல்லாம் படித்து பெரிய ஆளாக வரணும் என மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மருது அறிவுறித்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் ஞானவேலன், செல்வமணி, மயிலாடுதுறை நகர மன்ற தலைவர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர்கள் இமய நாதன் ,மங்கை சங்கர், அன்பழகன், மாவட்ட சுற்றுச்சூழல் அமைப்பாளர் சௌமியன் , மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தில் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.