திருப்பூர் ஏப்ரல்: 21
தமிழ்நாட்டினுடைய பண்பாட்டையும், அரசியல் நாகரிகத்தையும், மேடை நாகரிகத்தை அசிங்கப்படுத்தியும், தாய்மார்களின் மனங்களையும், மக்களின் மனங்களையும் புண்படுத்தியும், கீழ்த்தரமான முறையில் ஆபாசமாகப் பேசி இருக்கின்ற விடியா திமுக அரசின் அமைச்சர் பொன்முடியைக் கண்டித்தும், உடனே அமைச்சர் பதவியிலிருந்து விலக கோரியும், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
தமிழ்நாட்டில் இத்தகைய அநாகரிக அரசியலுக்கு இடமில்லை என்பதை உரக்கச் சொல்லுகின்ற வகையிலும், திருப்பூர் மாநகர் மாவட்ட அ.இ.அண்ணா.தி.மு.க. மகளிர் அணியின் சார்பாக , மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி.சுந்தராம்பாள் அவர்களின் தலைமையில் திருப்பூர் குமரன் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர்,பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர்,கழகத் தேர்தல் பிரிவு செயலாளர்,திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் முனைவர் பொள்ளாச்சி.
V.ஜெயராமன் பெண்களை இழிவாகவும், கீழ்த்தரமாகவும் பேசிய வனத்துறை அசைச்சர் பொன்முடியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கண்டன உரையாற்றினார்.
திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் ஒன்றிய கழகச் செயலாளருமான K.N. விஜயகுமார் திருப்பூர் தெற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாநில அம்மா பேரவை இணை செயலாளருமான சு.குணசேகரன் ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.
மாவட்ட கழக இணை செயலாளர் திருமதி. சங்கீதா சந்திரசேகர் மாவட்ட கழக துணைச் செயலாளர் திருமதி.லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில், திருப்பூர் தெற்கு மத்திய பகுதி கழக செயலாளரும் மாமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான கண்ணப்பன் மாநில எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர்
பட்டுலிங்கம், மாவட்ட கழக துணைச் செயலாளர் பூலுவபட்டி பாலு, கழக பொதுக்குழு உறுப்பினர் தம்பி மனோகரன், வாலிபாளையம் பகுதி கழக செயலாளர் கேசவன், கொங்கு நகர் பகுதி கழக செயலாளர் P.K.முத்து, முருங்கபாளையம் பகுதி கழக செயலாளர் A.S.கண்ணன் கோல்டன் நகர் பகுதி கழக செயலாளர் ஹரி ஹரசுதன் தொட்டி பாளையம் பகுதி கழக செயலாளர் வேலுமணி, அங்கேரிபாளையம் பகுதி கழக செயலாளர் பாலசுப்பிரமணியம்,சிறுபூலுவபட்டி பகுதி கழக செயலாளர் தங்கராஜ், நெருப்பெரிச்சல் பகுதி கழக செயலாளர் நாச்சிமுத்து,புதிய பஸ்நிலையம் பகுதி கழக செயலாளர் கனகராஜ், கருவம்பாளையம் பகுதி கழக செயலாளர் சிவாளா தினேஷ், சென்னிமலை ஒன்றிய கழக செயலாளர் கோபாலகிருஷ்ணன்,மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், மாவட்ட விவசாய அணி செயலாளர் கலைமகள் கோபால்சாமி, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் வேல்குமார் சாமிநாதன், மாவட்ட மாணவரனி செயலாளர் சதிஷ், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர். சீனியம்மாள்,மாவட்ட அமைப்பு சாரா ஒட்டுநர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல்,மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் ரத்தினகுமார், சென்னிமலை பேரூராட்சி கழக செயலாளர் ரமேஷ், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் முருகசாமி, மாவட்ட பாசறை தலைவர் யுவராஜ் சரவணன், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாவட்ட,நகர,ஒன்றிய,பகுதி,பேரூராட்சி, வார்டு, ஊராட்சி மற்றும் கிளை கழக நிர்வாகிகள், கழக மகளிரணி நிர்வாகிகள்,முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், முன்னாள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், பூத் கிளை நிர்வாகிகள், , கழக முன்னோடிகள் பங்கேற்றனர்.