புதுக்கோட்டை 20
புதுக்கோட்டை மாவட்டம் மச்சுவாடியில் ரவிஸ் காபி பார் அருகில் கோடைகால தண்ணீர் பந்தல் திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப் பாண்டியன் தலைமையில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா தெற்கு மாவட்ட செயலாளரும் சட்டத்துறை அமைச்சருமான எஸ்.ரகுபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். விழாவில் வருகை தந்த அனைவரையும் வரவேற்று தமிழக முதல்வர் கோடை காலத்தில் மக்களின் தாகத்தை தணிக்க நகரில் பல பகுதிகளின் தண்ணீர் பந்தல் அமைத்து நீர்மோர் வழங்க வேண்டும் என்று கூறினார்.
அதன் அடிப்படையில் நானும் எஸ்.ரகுபதி வடக்கு மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் முத்துராஜா ஆகியோர் ஏற்பாட்டில் பல பகுதிகளின் நூற்றுக்கணக்கான தண்ணீர் பந்தலை திறந்து வைத்துள்ளோம் அந்த வகையில் புதுக்கோட்டை தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ரவிஸ் காபி பார் முன்பாக மாவட்ட வர்த்தக துணை அமைப்பாளர் ரவிஸ் காபி பார் உரிமையாளர் ரவி மாவட்ட மருத்துவ அணி துணை தலைவர் டாக்டர் மனோஜ் குமார் ஏற்பாட்டில் இந்த தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இதில் அனைவருக்கும் தினசரி நீர் மோர் வழங்கப்படும் எனத் தெரிவித்தனர்.
விழாவில் மாநகராட்சி துணை மேயர் லியாகத் அலி இலக்கிய பேரவைத் தலைவர் சந்திரசேகர் புதுக்கோட்டை மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் முத்துக்கருப்பன். மாநகர உறுப்பினர் பத்தாவது வார்டு பால்ராஜ் மூணாவது வார்டு புதுநகர் குமார் அறிவுடை நம்பி முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் செல்வராஜ் அறிவழகன் கே.எம்.எஸ்.குமார் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.