ஈரோடு மே 29
ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோவிலில் சின்னமாரியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா நடந்தது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து சாமி தரிசனம் செய்தனர்
மேலும் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஈரோடு செங்குந்த மகாஜன சங்கத்தின் மாவட்டத் தலைவர் டாக்டர் நந்தகோபால் மாவட்ட செயலாளர் சோழா ஆசைத்தம்பி ஆகியோர் கலந்து கொண்டனர். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வைரம் பிரதாப் விக்ரம் யோகானந்தன் பெரியவலசு கிளை தலைவர் கிருபா இளைஞரணி சிவநேசன் பிரதீப் முத்து வசந்த் பாலாஜி வினோத் பிரசன்னா ரவி ஶ்ரீதர் மற்றும் காஞ்சிக்கோவில் கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் மகளிரணியினர் இளைஞரணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.