சேலம் கிழக்கு மாவட்ட திமுக ஏற்காடு ஒன்றியத்தின் சார்பில் நிதி ஹிந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம் மற்றும் தொகுதி சீரமைப்பில் தமிழகத்திற்கு அநீதி விளைவிக்கும் மத்திய அரசை கண்டித்து சேலம் மாவட்டம் வாழப்பாடி பேருந்து நிலையத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ் ஆர் சிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு, சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டாக்டர் வீரபாண்டி ஆ.பிரபு வரவேற்புரை ஆற்றிய இந்த பொதுக்கூட்டத்திற்கு, தலைமை கழக பேச்சாளர்கள் நாஞ்சில் சம்பத் மற்றும்கீர்த்திகா, கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசன் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஸ்ரீனிவாசன், ஏற்காடு தொகுதி இளைஞர் அணி செயலாளர் ஆனந்தகுமார் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடர்ச்சியாக தமிழகத்திற்கு மத்திய அரசு செய்து வரும் துரோகங்கள் குறித்து பட்டியலிட்டு பேசினர். மேலும் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் வாக்குறுதியில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் மட்டுமல்லாமல் அறிவிக்கப்படாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி தற்பொழுது தமிழக மக்களின் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ள திமுக அரசிற்கு வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில், மாவட்ட அவைத் தலைவர் கருணாநிதி, மாவட்டத் துணைச் செயலாளர் பாரப்பட்டி சுரேஷ் குமார், சின்னதுரை, கோமதி, மாவட்ட பொருளாளர் ஸ்ரீராம், செயற்குழு உறுப்பினர்கள் சங்கர் என்கின்ற சாமிநாதன் மனோகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வன் மலர்விழி ராஜா சந்திரமோகன் சோமசுந்தரம் முத்துலிங்கம் கோபால் ராஜா வாழப்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர் மாதேஷ்வரன், அயோத்தியாபட்டினம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் விஜயகுமார், வடக்கு ஒன்றிய கழக செயலாளர் சக்கரவர்த்தி அயோத்தியாபட்டணம் வடக்கு ஒன்றிய செயலாளர் ரத்னவேல் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய கழக செயலாளர் சிவராமன் ஏற்காடு ஒன்றிய கழக செயலாளர் ராஜேந்திரன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவராமன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரூபன் ராஜேஷ்குமார் உட்பட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சதீஷ்குமார், ரமேஷ் பாரப்பட்டி மனோஜ் குமார் செல்வம் சுப்பிரமணி செல்வராஜ் கவிதா சக்கரவர்த்தி மற்றும் ஜெய செல்வி பாலாஜி உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
இந்தி திணிப்பு, நிதிப்பதிர்வில் பாரபட்சம்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics