நாகர்கோவில் ஏப் 16
குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள அண்ணா சிலை முன்பு தமிழக நுகர் பொருள் வாணிப கழக தலைவராக திமுக முன்னாள் மூத்த அமைச்சரும், முன்னாள் குமரி மாவட்ட திமுக செயலாளருமான என்.சுரேஷ்ராஜன் நியமனம் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டதை தொடர்ந்து குமரி மாவட்ட திமுகவினர் துணை மேயர் மேரி பிரின்சி லதா தலைமையில் ராமன் புதூர் கலுங்கு ஜங்ஷன் மற்றும் வடசேரி அண்ணா சிலை முன்பு
பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துணை மேயர் மேரி பிரின்சி லதா தின தமிழ் நிருபர் ரஜினி செல்வத்தின் 51-வது பிறந்த நாளை கேள்விப்பட்டு உடனடியாக தனது அலுவலகத்திற்கு நிருபரை வரவழைத்து அழைத்து அவருக்கு பொன்னாடை தனது சார்பாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இறைவனின் அருளால் இந்த புதிய பிறந்த ஆண்டில் எல்லா வளமும் பெற்று சீரும் சிறப்புடனும் வெற்றி பயணத்தில் தொடர்ந்து முன்னேறி செல்ல வாழ்த்து தெரிவித்தார்.
இத்தனை பணிகளுக்கு மத்தியிலும் ஒரு நிருபரின் பிறந்தநாளை அறிந்த உடன் அவரை அழைத்து பொன்னாடை போர்த்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த துணை மேரின் வியத்தகு செயலுக்கு தின தமிழ் நிர்வாகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.