கன்னியாகுமரி ஏப் 16
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா் நயினாா் நாகேந்திரன். பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழ் புத்தாண்டில் தமிழா்கள் அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும். அனைவருக்கும் எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் நடைபெறுகிற மக்கள் விரோத ஆட்சி மாற்றப்பட்டு, தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் அடுத்த ஆண்டு புதிய ஆட்சி அமையும் என நம்புகிறேன். அதற்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும்.
திமுக ஆட்சியில் பாலியல் வன்கொடுமை, போதைப் பொருள் நடமாட்டம், கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. இதிலிருந்து மாற்றம் வரவேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான கூட்டணி எடப்பாடி பழனிசாமி தலைமையில் பெரும்பான்மையான வெற்றியை பெறும் என்றாா் அவா். உடன் கன்னியாகுமரி நகா்மன்ற பாஜக உறுப்பினா் சி.எஸ்.சுபாஷ், மாவட்ட பாஜக ஆன்மிக பிரிவு செயலா் ஜெயராம் ஆகியோா் உடனிருந்தனா்.