தமிழ் புத்தாண்டு முன்னிட்டு வர்த்தக ரெட்டி பட்டி இந்து நன்குடி வெள்ளாளர் சமுதாய சார்பில் மாபெரும் மாட்டு வண்டி எல்லை பந்தயம்:- தூத்துக்குடி மாவட்டம் வர்த்தக ரெட்டி பட்டியில் தமிழ் புத்தாண்டு முன்னிட்டு இந்து நன்குடி வெள்ளாளர் சமுதாய சார்பில் 3ம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது. இப்போட்டியை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்,
இந்த மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயத்திற்கு
நடுமாடு மாட்டுவண்டி, சின்னமாடு வண்டி, பூஞ்சிட்டு என 3 பிரிவுகளாக நடைபெற்றது இப்போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து பல ஜோடி காளைகள் கலந்து கொண்டன. நடு மாட்டுவண்டிக்கு வர்த்தக ரெட்டி பட்டி முதல் மேல கூட்டுடன்காடு சாலை வரை ( நடுமாடுவண்டிபந்தயம் தூரம் 8 மைல்கள், சின்ன மாட்டு வண்டிக்கு 6 மைல்கள், பூஞ்சிட்டு மாட்டு வண்டி 5மைல் போக வர தூரம் நிர்ணயிக்கப்பட்டது, இதில் வெற்றி பெற்ற மாடு வண்டிகளுக்கு பரிசுத்தொகை வழங்கி, வண்டி உரிமையாளர்கள் ,சாரதிகளுக்கு ப பொன்னாடை போர்த்தி கவுரவிப்பட்டது பின்னர் வெற்றி பெற்ற மாடு வண்டி உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது இதில் முதலாக வந்த வண்டி முதல் நான்கு வது வண்டியாக வந்த வரை பரிசு தொகை வழங்க பட்டது முதல் வண்டி பரிசுத்தொகை ரூபாய்20003 பேச்சியம்மாள் கலிங்கபட்டி ர , இரண்டாம் பரிசு தொகை ரூ15003 உதயம் துரை பாண்டி. நலந்தலை , மூன்றாம் பரிசுத்தொகை 12003ரூபாய் ஓம் முருகன் முத்தையாபுரம் , நான்கு பரிசுத்தொகை 5003 ஏஸ்.எம். வர்த்தக ரெட்டி பட்டி , சின்ன மாட்டு வண்டி முதல் பரிசு பொன் செல்வி வர்த்தக ரெட்டி பட்டி 11003, 2 வதுபரிசு முருக தேவியார் ரூபாய் 9003, 3வதுபரிசுத்தொகையை y. சங்கர் ரூபாய் 7003, நான்குவது பரிசுத்தொகையை எம்.பி.நாசினி 4003, பூஞ்சிட்டுமாட்டுவண்டிக்கு முதல் பரிசுத்தொகையை பேச்சிமுத்து , தினேஷ் பாண்டி ரூபாய் 9003, 2வது வந்த வண்டிக்கு பரிசு தொகையை ஓம் முருகன் முத்தையா புரம்,மாசாணம் கீழ்பாட்டம் ரூபாய் 8003,3 வதுவந்த வண்டிக்கு பரிசு தொகையை சங்கர் மணக்கரை,எஸ்.ஆர்.சி. சாமியார் ரூபாய் 5003, நான்கு வதுபரிசு தொகையை சாமி தேவர் பத்மநாதமங்களம்,எஸ்.என்.எஸ்.சுகனியா ரூபாய் 3003 வழங்கப்பட்டது. சீறிப்பாய்ந்த காளைகள், சாலையின் இருபுறமும் நின்று பார்த்து ரசித்த பொதுமக்களும், மாட்டு வண்டி பந்தய ரசிகர்களும் ஆரவாரமிட்டு உற்சாகப்படுத்தினர்கள் இந்நிகழ்ச்சி யை இந்து நன்குடி வெள்ளாளர் சமுதாயம் மற்றும் வர்த்தக ரெட்டி பட்டி ஊர் பொதுமக்கள் ஏற்படும் செய்து இருந்தனர்
மாபெரும் மாட்டு வண்டி எல்லை பந்தயம்
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics