மதுரை ஏப்ரல் 13
மதுரை காமராசர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க அரங்கில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மதுரை மண்டல கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சித் தலைவர் ஜிகே வாசன் எம்பி தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக கட்சி தலைவர் ஜிகே வாசன் எம்பி பேசியதாவது
மதுரை மண்டல நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டம் எதிர் வரும் 2026 சட்டப்பேரவை தேர்தல் களப்பணியாற்றுவது குறித்து நடைபெறுகிறது.
என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில் திமுக மூத்த அமைச்சர் ஒரு மதத்தை பற்றியும் மகளிர் பற்றியும் அறுவறுக்கதக்க வகையில் பேசியிருப்பது கண்டனத்துக்கு உரியது மேலும் அவரை அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கியது போன்று அமைச்சர் பதவியில் இருந்தும் அவரை நீக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து அதிமுக பாஜக கூட்டணி பேச்சு வார்த்தை மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
அதன் பின்னர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில்
மத்திய அமைச்சருக்கு
தேனீர் விருந்து அளிக்கப்பட்டது.
கூட்டணி பேச்சு வார்த்தைக்கு இந்த உபசரிப்பு மேலும் வலுப்படுத்தியுள்ளது.
எனவே எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் இன்டியா கூட்டனி சார்பில் வலுவான கூட்டணி அமைத்து ஆட்சி அமையும் அதே நேரத்தில் திமுக படுதோல்வியை சந்திக்கும் என்று அவர் இவ்வாறு கூறினார்.
இந்த கூட்டத்தில் மதுரை தேனி திண்டுக்கல் சிவகங்கை விருதுநகர் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து மாவட்டத் தலைவர்கள் மாநில நிர்வாகிகள் மற்றும் வட்டார தலைவர்கள் சர்க்கிள் கமிட்டி தலைவர்கள் உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழாவில் முன்னாள் எம்பி என்எஸ்வி.சித்தன் முன்னாள் எம்எல்ஏக்கள்.
கேஎஸ்கே.ராஜேந்திரன். விடியல் சேகர். ராம் பிரபு. மற்றும் மதுரை மாவட்ட தலைவர்கள்.
ராஜாங்கம். நடராஜன்.
துரைப்பாண்டி பாரத் நாச்சியப்பன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.