கருங்கல், ஏப்- 10.
கருங்கல் அருகே கானாவூர் பகுதியை சேர்ந்தவர் மரியதாஸ். இவருக்கு நிஷாந்த் (32), வினோத் (29) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். நிஷாந்த் லோடு மேனாகவும், வினோத் டிரைவராகவும் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் பூர்வீக சொத்தை பிரிப்பது சம்பந்தமாக அண்ணன் தம்பியிடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது நிஷாந்த் வீட்டில் இருந்த தனது தாயை தாக்கியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த வினோத் தான் வைத்திருந்த கத்தியால் உடன் பிறந்த அண்ணனை குத்தினார்.
இதில் பலத்த காயமடை நிஷாந்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து அண்ணனை கத்தியால் குத்திய தம்பி வினோத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.