வேலூர்=09
வேலூர் மாவட்டம் ,வேலூர் மாநகரம் இராமநாயக்கன்பாளையம் சின்ன அல்லாபுரம் பச்சையப்ப கவுண்டர் வீதியில் கோவில் கொண்டுள்ள அருள்மிகு செல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீ ராமர் பஜனை திருக்கோயிலில் 5ஆம் ஆண்டு ஸ்ரீ ராம நவமி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது இவ்விழாவில் செல்வ விநாயகர் ,ஸ்ரீ ராமர் சீதாதேவி, ஸ்ரீ லக்ஷ்மணர், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஆகியரின் பஞ்சலோக விக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றதை தொடர்ந்து ஸ்ரீ சீதாதேவி ஸ்ரீ ராமர் திருக்கல்யாண வைபவமும் சுவாமி தேரில் திருவீதி உலாவும் வெகு விமரிசையாக நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர் வேலூர் மாவட்ட செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி ப. ஜெகன் மற்றும் கிராம கௌரவ தலைவர்கள் ,விழா குழு கௌரவ தலைவர்கள், கிராம சபையினர், மற்றும் ஊர் பொதுமக்கள் ,பக்தர்கள், பலர் கலந்து கொண்டனர்.