திண்டுக்கல் மாவட்டம், கொம்பேறிபட்டி ஊராட்சியில் இந்தியாவின் முதல் பாரத பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் 60-வது நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கொம்பேறி பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஏ.எம்.ராஜரத்தினம் தலைமையில் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் கொம்பேறி பட்டி வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
பாரத பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் 60-வது நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது
Leave a comment