தருமபுரி மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட தொழில் முனைவோர் மேம்பாட்டு கழகம் ஆகியவற்றின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி அரூரில் நடைபெற்றது. இந்த பயிற்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது. மகளிர் சுய உதவி குழுக்கள் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், தனிநபர் வருமானம் பெருக்கும் நோக்கத்திலும், கிராம அளவில் தொடங்கப்பட்டுள்ளது.இந்த குழுக்களுக்கு சுழல் நிதி கடன், பொருளாதார கடன், வங்கி கடன்கள் வழங்கப்படுகிறது. மேலும் கிராமப்புற பகுதிகளில் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நகரப் பகுதிகளில் விற்பனை செய்ய ஏதுவாக ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் மாவட்ட அளவிலான முதன்மை விற்பனை வளாகமும் கட்டி திறந்து வைக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வளாகத்தில் மகளிர் குழு உற்பத்தி பொருட்களை வைத்து விற்பனை செய்து தங்கள் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று ஆட்சி தெரிவித்தார். இந்த பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பயிற்சி உபகரணங்களை ஆட்சியர் வழங்கினார். இதைத் தொடர்ந்து அரூர் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக அலுவலர்களுடன் ஆட்சியர் ஆலோசனை நடத்தினார். பின்னர் மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தின் சார்பில் அரூர் தாலுகாவில் செயல்பட்டு வரும் விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது அரூர் உதவி கலெக்டர் சின்னசாமி, தாசில்தார் பெருமாள்,தொழில் முனைவோர் மேம்பாட்டு கழக மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கவுதம், கருணாநிதி, மாவட்ட திட்ட அலுவலர் அப்துல் காதர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், லோகநாதன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
தொழில் முனைவோருக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics