தென்காசி ஏப் 9
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கிடைத்த புகார்களின் அடிப்படையில் கடையநல்லூர் நகராட்சியில் பணிபுரிந்த முன்னாள் மேலாளரை நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்..
கடையநல்லூர் நகராட்சியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மேலாளராக பணிபுரிந்து வந்தவர் பாபு(60) இவர் கடையநல்லூரில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது பல்வேறு வகைகளில் திட்டங்களுக்கான காசோலை வழங்குவதிலும் நிர்வாக ரீதியான சில விஷயங்களிலும் முறைகேடாக நடந்து அரசிற்கு இழப்பு செய்ததாக கூறி திருநெல்வேலி மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் இவரை ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார் இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரிலும் தனது லஞ்ச கைங்கரியத்தை கடமையாகக் கொண்டு குடிநீர் வழங்குவதிலிருந்து டெண்டர் குத்தகை வீட்டு வரி பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் பொதுமக்களிடம் லஞ்சப் பணத்தை கரராக பேசி லாவகமாக வாங்கிக் கொள்வதாக கூறப்படுகிறது இது குறித்து விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறைக்கு பொதுமக்கள் மற்றும் பொது நல அமைப்புகள் சார்பில் பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்டாலும் லஞ்சம் வாங்குவதை நிரூபிக்க முடியாத சூழல் அங்கே நிலவி வந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் கடையநல்லூரில் குடிநீர் வழங்குவதில் துவங்கி சாலை குத்தகை டெண்டர் உள்ளிட்ட பல்துறை திட்டங்களில் பல்வேறு முறைகேடுகளில் மேலாளர் பாபு ஈடுபட்டதை லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்டுபிடித்து அரசிற்கு தகவல் தெரிவித்தனர் இந்த நிலையில் வழக்கம் போல் பொதுமக்களிடம் கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் அவரை பெரம்பலூருக்கு மாற்றி உத்தரவிட்டது இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை பாபு நிர்வாக ரீதியாக செய்த முறைகேடுகளைப் பட்டியலிட்டு மதுரை மற்றும் திருநெல்வேலிமண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குனருகளுக்கு அனுப்பவே அவர்களும் நகராட்சியின் நிர்வாக ஆணையரிடம் ஒப்புதல் பெற்று மேலாளர் பாபு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது கண்கூடாக தெரிவதாக கூறி பாபுவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் மார்ச் 31 ஆம் தேதி ஓய்வு பெற இருந்த பாபுவை சஸ்பெண்ட் செய்த விவகாரம் கடையநல்லூர் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..