காஞ்சிபுரம் தெற்கு ஒன்றிய தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட மாகரல் ஊராட்சியில் பயணியர் பேருந்து நிறுத்தம் அருகே தமிழக வெற்றிக் கழகம், காஞ்சிபுரம் தெற்கு ஒன்றியம் சார்பில், இளநீர், வெள்ளரிக்காய், தர்பூசணி, ஜுஸ், பழவகைகளுடன் தண்ணீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
த.வெ.க கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் எஸ்.பி.கே தென்னரசு வழிகாட்டுதலின்படி, காஞ்சிபுரம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஏ.விம்.எம் வினோத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தண்ணீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு, இளநீர், தர்பூசணி, ஜுஸ், பழங்கள் வழங்கினார்.
இதில், காஞ்சிபுரம் தெற்கு ஒன்றிய நிர்வாகிகள், சதீஷ், சந்தோஷ், ராகவன், வேலு, கல்வி, விநாயகம், மாயா உள்ளிட்ட த.வெ.க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.