மதுரை மாவட்டத்தில் உள்ள 10.TH,12.TH.ITI, பாலிடெக்னிக், மற்றும் பொறியியல் கல்லுாரிகளில் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர், மாணவியர்களுக்கு வருகின்ற 15.04.2025 (செவ்வாய் கிழமை) அன்று காலை 09.00 மணி முதல் தொழிற்பழகுநர் பயிற்சிக்கான பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மூன்று மாவடி, மதுரையில் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் அரசு மற்றும் தனியார் துறையைச் சார்ந்த பல முன்னணி தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களுக்கு தேவையான தொழில் பழகுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் கலந்து கொள்ள உள்ள மாணவர்கள் தங்களது கல்வி தேர்ச்சி சான்றிதழ், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம். மேலும் தொழிற் பழகுநராக தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகையாக ரூபாய் 7700 முதல் 12,000 வரை வழங்கப்படும். தொழிற் பழகுநர் பயிற்சியின் முடிவில் தொழிற்பழகுநர் சான்றிதழும் வழங்கப்படும்.
எனவும்
மேலும் தொடர்புக்கு
உதவி இயக்குநர்,
மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம்
மதுரை. 9499055748/8610078848.
மேற்காணும் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.