பரமக்குடி,மார்ச்.28: பரமக்குடி நகரில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு டிஜிட்டல் சிக்னல் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் வாயிலாக, பரமக்குடி தாலுகா நயினார்கோவில், அண்டக்குடி, பாண்டியூர், மஞ்சக்கொல்லை, முத்துவயல், சத்திரக்குடி, போகலூர் மற்றும் பார்த்திபனூர் கமுதகக்குடி ஆகிய பகுதிகளில் ஆப்டிகல் பைபர் கேபிள் வழியாக கடந்த 15 வருடங்களாக தாலுகா முழுவதும் உள்ள ஆப்பரேட்டர்களுக்கு ஒளிபரப்பை வழங்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அண்டக்குடி, வலசை நயினார்கோவில் மற்றும் முத்துவயல் கமுதக்குடி பகுதிகளில் உள்ள ஆப்டிகல் பைபர் கேபிள் கொண்டு செல்லும் வழித்தடங்களில் உள்ள இரும்பு பைப்புகளை அறுத்து திருடி செல்கின்றனர். மேலும் ஆப்டிகல் வயர்களை சேதப்படுத்தி ஒளிபரப்பை தடை செய்து வருகின்றனர். இது சம்பந்தமாக நயினார்கோவில் மற்றும் சத்திரக்குடி காவல் நிலையங்களில் பரமக்குடி அரசு கேபிள் டிஸ்ட்ரிபியூட்டர் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை பிடிப்பதற்காக காவல்துறையினர் மூலமாக ஆங்காங்கே சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர். பொதுமக்கள் இது குறித்து தகவல் தெரிந்தால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும். அரசு கேபிள் டிவி ஒளிபரப்பை தடை செய்யும் நோக்கில் செயல்படுபவர்கள் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பரமக்குடி அரசு கேபிள் டிஜிட்டல் சிக்னல் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
படம்
பரமக்குடி நயினார் கோவில் மற்றும் வலசை பகுதிகளில் சேதப்படுத்தப்பட்டுள்ள அரசு கேபிள் வயர்கள்,அறுத்து எடுக்கப்பட்ட. கம்பி .
அரசு கேபிள் டிவி ஆப்டிகல் பைபர் கேபிள் சேதம்.
குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை.
பரமக்குடி,மார்ச்.29: பரமக்குடி நகரில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு டிஜிட்டல் சிக்னல் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் வாயிலாக, பரமக்குடி தாலுகா நயினார்கோவில், அண்டக்குடி, பாண்டியூர், மஞ்சக்கொல்லை, முத்துவயல், சத்திரக்குடி, போகலூர் மற்றும் பார்த்திபனூர் கமுதகக்குடி ஆகிய பகுதிகளில் ஆப்டிகல் பைபர் கேபிள் வழியாக கடந்த 15 வருடங்களாக தாலுகா முழுவதும் உள்ள ஆப்பரேட்டர்களுக்கு ஒளிபரப்பை வழங்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அண்டக்குடி, வலசை நயினார்கோவில் மற்றும் முத்துவயல் கமுதக்குடி பகுதிகளில் உள்ள ஆப்டிகல் பைபர் கேபிள் கொண்டு செல்லும் வழித்தடங்களில் உள்ள இரும்பு பைப்புகளை அறுத்து திருடி செல்கின்றனர். மேலும் ஆப்டிகல் வயர்களை சேதப்படுத்தி ஒளிபரப்பை தடை செய்து வருகின்றனர். இது சம்பந்தமாக நயினார்கோவில் மற்றும் சத்திரக்குடி காவல் நிலையங்களில் பரமக்குடி அரசு கேபிள் டிஸ்ட்ரிபியூட்டர் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை பிடிப்பதற்காக காவல்துறையினர் மூலமாக ஆங்காங்கே சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர். பொதுமக்கள் இது குறித்து தகவல் தெரிந்தால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும். அரசு கேபிள் டிவி ஒளிபரப்பை தடை செய்யும் நோக்கில் செயல்படுபவர்கள் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பரமக்குடி அரசு கேபிள் டிஜிட்டல் சிக்னல் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.