அரியலூர், மே:27
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள இலந்தைக்குளம் கிராமத்தில் கால்நடை சிறப்பு முகாம் நடைபெற்றது.அதில் ரோவர் வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் சுவேதா, தாரணி வர்ணிக்கா, வித்யா ,விஷ்ணு பிரியா யாசகி,யோக ஸ்ரீ,யோகிதா ,யுவசங்கரி ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் பல்வேறு விவசாயிகள் தங்கள் கால்நடைகளை அழைத்து வந்து பரிசோதனை செய்து தடுப்பூசி மற்றும் மருந்துகளை வாங்கி சென்றனர்.அதில் கால்நடை மருத்துவர் செந்தாமரை அவர்கள் கால்நடைகளை அடிக்கடி பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்,இங்கு கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்துவதாகவும், மடிவீக்கம் நோய் வந்தால் அதற்கு ஆன்டிபயாட்டிக் தடுப்பூசி செலுத்துவதாகவும் மற்றும் குடற்புழு நீக்கம் செலுத்தவும், கால்நடைகளுடைய பற்களை வைத்து வயதை கணக்கிட முடியும் என்று கூறினார்.மற்றும் பறவைகளுக்கு கோழிக்கழிச்சல் பரவுவதால் அதற்கு இராணித் கெட் தடுப்பூசி செலுத்துவதாகவும் கூறினார்.