திருப்பூர், ஏப்.02-
இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு சமூக நல்லி ணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கல்லூரி சாலை யில் உள்ள குலாம் காதர் கார்டன் பள்ளிவாசலில் பள்ளியின் தலைவர். குலாம் காதர் யாசர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருப்பூர் மத்திய மாவட்ட செயலாளரும், தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான
க.செல்வராஜ் இஸ்லாமியர்களுடன் அமர்ந்து நோன்பு கஞ்சி மற்றும் பழம் வகைகளை அறிந்தினார். முன்னதாக சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினருக்கு பள்ளி வாசலின் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் வாழ்வதற்கு சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது இந்த நிகழ்ச்சியில். தெற்கு செயலாளர்
டி.கே .டி .நாகராஜ். பகுதி கழக செயலாளர். மின்னல் நாகராஜ். மனிதநேய ஜனநாயக கட்சியின் தொழிற்சங்க மாநில துணைச் செயலாளர். ஜாகிர் உசேன், மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர். ராயல் ராஜா மற்றும் நிர்வாகிகள் கலீல் அஹமத், செய்யது அக்பர். செய்யது கபுர், இஸ்மாயில், கலீல் ரஹ்மான், அப்துல் ரஹ்மான், அமீர், காஜா, இம்தியாஸ், வழக்கறிஞர் அமான், அர்ஷத், ஸுபைர், சபீர், அனீஸ் மற்றும்பலர் கலந்து கொண்டார்கள்.