ராமநாதபுரம், ஏப்.2-
ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தொண்டி பேரூர் சார்பில் பேரூர் தலைவர் காதர் தலைமையில் சதக்கத்துல் பித்ர் எனும் நோன்பு பெருநாள் தர்மம் 120 குடும்பத்திற்கு அரிசி, கறி, புத்தாடைகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி, தமுமுக மாநில செயலாளர் சாதிக் பாட்சா, தொழிலதிபர் டிம்மி சுல்தான், தமுமுக பேரூர் செயலாளர் பரக்கத் அலி, மமக பேரூர் செயலாளர் மைதீன் பிச்சை, பேரூர் பொருளாளர் அப்துல்லா,தகவல் தொழில்நுட்ப அணி ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் பஹ்ருல்லா ஷா, அலாவுதீன் அகமது இப்ராஹிம் நிசார் ரிஸ்வான் பவுசூல் ரஹ்மான் ஜலால் உட்பட தமுமுக மமக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.