மார்த்தாண்டம் மார்ச் 22
குமரி மாவட்டம் களியல் அருகே உள்ள மருதம்பாறை சந்திப்பில உள்ள ஒரு வீட்டின் வெளிபுறத்தில் சமையல் செய்வதற்காக விறகுகள் வைக்கப்பட்டிருந்தன . வழக்கம்போல் அடுப்பு எரிக்க விறகு எடுக்கச் சென்ற போது அந்த இடத்தில் பதுங்கியிருந்த பெரிய ராஜநாகத்தை பார்த்த வீட்டின் உரிமையாளர் மற்றும் பக்கத்து வீடுகளை சேர்ந்த மக்கள் அச்சமடைந்து. உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் தகவல் கொடுத்து 3 மணி நேரம் ஆகியும் சம்பவ இடத்திற்கு வனத்துறை அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஊர்மக்கள், குலசேகரம் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த வந்த குலசேகரம் தீயணைப்புத் துறையினர் ராஜநாகத்தை பத்திரமாக பிடித்துச் சென்றனர். ஊர்மக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு நன்றி தெரிவித்தனர். தகவல் கொடுத்து 3 மணிநேரம் ஆகியும் சம்பவ இடத்திற்கு வனத்துறை அதிகாரிகள் யாரும் வராத காரணத்தால் ஊர்மக்கள் அதிருப்தி அடைந்தனர்.