வேலூர் ஒட்டேரியில் இலவச கண் பரிசோதனை முகாம் .
வேலூர்=20
வேலூர் மாவட்டம் , வேலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் சி.எம்.சி.கண் மருத்துவமனை மற்றும் ஓட்டேரி நிர்மல் கண் ஒளியியல் மையம் இனைத்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் வேலூர் ஓட்டேரி ஸ்ரீநிவாஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இதில் கண்புரை, சர்க்கரை அளவு ,இரத்தக்கொதிப்பு, ஆகியவற்றிற்கான பரிசோதனைகள் மேற்கொண்டு மருத்துவர்கள் ஆலோசனைகள் வழங்கினர் முகாமில் ஓட்டேரி நிர்மல் கண் ஒளியியல் மையம் மருத்துவர் நிர்மல் சி.எம்.சி. மருத்துவமனை டாக்டர் ஜுடா, டாக்டர் ஸ்ருதி ,முகாம் ஒருங்கிணைப்பாளர் ஜான்.பி. ஹிட்லர் , மற்றும் சி.எம்.சி.கண் மருத்துவமனை குழுவினர்கள், பொதுமக்கள் ,பலர் கலந்து கொண்டனர்.இம்முகாமில் கலந்து கொண்டு அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு உணவு ,மருந்து, மாத்திரைகள், இலவசமாக வழங்கப்படுவதாக முகாமில் தெரிவித்தனர்.