மார்த்தாண்டம், மார்- 17
மார்த்தாண்டம் அருகே காட்டாத்துறை பகுதி பருத்திக் கோட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் மணி (62). கொத்தனார். இவர் நேற்று முன்தினம் இரவு இரவிபுதூர் கடை – கருங்கல் சாலையில் குன்னம்பாறை என்ற பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையை கடக்க முயன்றுள்ளார். அந்த நேரம் அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று ஸ்டீபன் மணி மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து அவருடைய மனைவி பிளாரன்ஸ் பாய் (56) என்பவர் மார்த்தாண்டம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.