நாகர்கோவில் மார்ச் 13
உரிமை கரங்கள் ஓட்டுநர் தொழிற்சங்கத்தின் 2025 -ம் ஆண்டிற்க்கான புதிய மாநில நிர்வாகிகள் தேர்தல் நேற்று மாலை கன்னியாகுமரியில் நடைபெற்றது.
கன்னியாகுமரி விவேகானந்தபுரம் தனியார் மஹாலில் வைத்து பொதுக்குழு மற்றும் செயற்க்குழு கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ல் இருந்து உரிமை கரங்கள் ஓட்டுநர் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வாக்காளித்தனர்.
இதில் மாநில தலைவராக ரத்தினவேல், மாநில பொதுச்செயலாளராக வெற்றிவேல், மாநில பொருளாளராக இளங்கோவன், மாநில ஒருங்கிணைப்பாளராக பாஸ்கரன், மாநில செய்தித் தொடர்பாளராக முஹம்மது காசிம், மாநில துணைத்தலைவர்களாக ரவீந்தரன், மணிகண்டன், கதிரேஷ், மாநில துணைச் பொதுச்செயலாளர்களாக சிவகுமார், ஹரிபாபு, பாரி ஆகியோர் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றனர்.
இந்நிகழ்ச்சியை கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் டாக்டர் கிறிஸ்டோபர் மற்றும் ராஜன் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.