திருப்பத்தூர்: மார்ச்:13, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டமானது தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் திருப்பத்தூர் மாவட்ட தலைவர் இராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் பாபு வாழ்த்துரை வழங்கினார். மாநில அமைப்பு செயலாளர் செங்கதிர் செல்வன் அறிக்கையினை வாசித்தார். மாவட்ட அமைப்பு செயலாளர் ஆர்பாட்டத்தினை நோக்க உரையினை வாசித்தார்.
ஆர்ப்பாட்டத்தின்போது: முறையான காலமுறை ஊதியம் பெற்று வரும் ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் பதிவறை எழுத்தார்களுக்கு உண்டான அரசின் சலுகைகளை ஊராட்சி செயலருக்கும் விரிவுபடுத்தி அரசாணை வெளியிட வேண்டும்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் ஊராட்சி செயலர்களாக பணிபுரிந்து வருபவர்களுக்கு முதன் முதலில் அரசாணை எண். 175 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை நாள்:5.12.2006 ன் மூலம் சிறப்பு கால முறை ஊதியம் 1.9.2006 முதல் ரூ.1300-20-1500-25-2000 என வழங்கி ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டது. பின்னர் ஊராட்சி உதவியாளர் நிலை-2 பணியிடங்களை ரூ.2500-5000 +500 GP உடன் ஊராட்சி உதவியாளர் என அரசாணை எண் 91. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை நாள்:12.8.2009 ல் ஆணையிடப்பட்டது.
இந்நிலையில் 2019 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் ஊதிய குழு பரிந்துரையின்படி பணி ஓய்வு பெறும் ஊராட்சி செயலர்களுக்கு நிதி துறையின் அரசாணை எண் 314.நாள் :25.10.2017 ன்படி சிறப்பு ஓய்வூதியமாக மாதம் ரூபாய் 20000 ஓய்வூதிய ஒட்டுமொத்த தொகையாக ஒரு லட்சம் அறிவித்து ஆணை இடப்பட்டு நாளது வரை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக ஊராட்சி செயலாளர்களின் நீண்ட கால கோரிக்கையினை அரசு பரிசளித்து ஊராட்சி செயலர்களுக்கு ரூபாய் 15900 -50400 என்ற தமிழக அரசின் ஊதிய குழு பரிந்துரையில் உள்ள ஊதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்ய அரசாணை 171 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை நாள் 30.11.2018 ஊராட்சி செயலர்கள் நாளது வரை இந்த ஊதியம் பெற்று வருகின்றனர் என்று ஆர்ப்பாட்டத்தில் குறிப்பிட்டு பேசினார்கள்.
மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தினை முறைப்படுத்தி ஊராட்சி செயலாளர்களை இணைக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினார்கள்.
இந்த ஆர்பாட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Leave a comment