சென்னை, பெரவள்ளூர் அருள்மிகு சுந்தரவல்லி சமேத சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா – இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பங்கேற்பு
சென்னை, பெரவள்ளூர் அருள்மிகு சுந்தரவல்லி சமேத சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில் திருக்குட முழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா – வெகு விமரிசையாக நடைபெற்றது.
இத்திருக்கோயில் நீண்ட நாட்களுக்கு பிறகு புனரமைக்கப்பட்டு, திருக்குட முழுக்கு திருநன்னீராட்டு விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன தலைவர்
ப.ரங்கநாதன், பெரம்பூர் ஐ.சண்முகதுரை நாடார்,இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் (விசாரணை) ந.திருமகள், இந்துசமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் (பொது) மா.கவிதா
இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் (திருப்பணி ) பொ.ஜெயராமன், இணை ஆணையர் சென்னை மண்டலம் 1 ஜ.முல்லை, உதவி ஆணையர் சென்னை மண்டலம் 1 க.சிவகுமார், பெருநகர் சென்னை மாநகராட்சி ஆறாவது மண்டல குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார், செயல் அலுவலர் தக்கார்
சு.நித்யகலா, அங்காளம்மன் கோவில் செயல் அலுவலர் சண்முகம், அகரம் சி. ஜானகி ராமன், சிட்டி பாபு, அகரம் பழனி ,லோகேஷ்
ஆகியோர் கலந்து கொண் டனர்.
கோயில் விமான கலசங்களுக்கு நன்னீர் ஊற்றும் போது மங்கள வாத்தியங்கள் முழங்க, ஆன்மீக அன்பர்கள் பெருமாளின் அருளைப் பெறுவதற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியிருந்து தரிசனம் செய்தனர்.