உரிமை த்துறை சார்பில் ஏழை பெண்களின் திருமணத்திற்கு திருமாங்கல்ய தங்கம் வழங்கும் விழா மற்றும் சர்வதேச மகளிர் தின விழா : அமைச்சர் கீதா ஜீவன்
தூத்துக்குடியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு திருமாங்கல்ய தங்கம் வழங்கும் விழா மற்றும் சர்வதேச மகளிர் தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு தூத்துக்குடி மாவட்ட சமூகநல துறை சார்பில் 2024-2025 ஆம் நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட 276 பயனாளிகளுக்கு ரூ.1,79,40,000/- மதிப்புள்ள தங்க நாணயம் மற்றும் ரூ.1,10,75,000/- நிதியுதவியும் ஆக மொத்தம் 2,90,15,000/- நிதியுதவியை அமைச்சர் வழங்கினார்.
மேலும் இத்திட்டத்தின் கீழ் 167 பயனாளிகள் பட்டம் முடித்தவர்களும் மற்றும் 109 பயனாளிகள் பத்தாம் வகுப்பு படித்தவர்களும் பயன்பெற்றனர்.பின்னர் அமைச்சர் கீதா ஜீவன் பேசும்போது பெண் சமுதாயம் முன்னேறினால் தான் தமிழ் சமுதாயம் வளரும் என முதல்வர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். பெண்களுக்கு கட்டணம் இல்லா பேருந்து, மாதம் ஆயிரம் மகளிர் உரிமைத் தொகை இதனால் பெண்கள் தங்கள் சொந்த செலவுக்கு யாரிடமும் கையேந்த வேண்டாம் என்றார்
இந்தியாவில் 12 மாநிலங்கள் முதலமைச்சர் திட்டத்தை பார்த்து வியந்து அவர்கள் இந்த திட்டத்தை நிறைவேற்றி வருகிறார்கள். அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம், கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு உதவி தொகை, தமிழ் சமுதாயம் வளரவேண்டும் என முதல்வர் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார் என்றார்.இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கேண்டயன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ரவிசந்திரன், சமூக நலம் அலுவலர் பிரேமலதா, உதவி ஆணையர் (மேற்கு) வெங்கடாசலம், திமுக மாநகர செயலாளர் அனந்த சேகரன்மற்றும் துறைசார்ந்த அரசு அதிகாரிகள், அலுவலர்கள் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்