நீலகிரி. மார். 11. ப்ளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் -கோத்தகிரியில் மாதாந்திர செயற்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் தலைவர் வாசுதேவன் தலைமையிலும் , பொருளாளர் மரியம்மா துணை தலைவர்கள் செல்வராஜ், ஜெயந்தி , கூடுதல் செயலாளர் பீட்டர்,மக்கள் தொடர்பு அலுவலர் முகமது இஸ்மாயில் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் செயலாளர் முகமது சலீம் அமைப்பின் கடந்த மாத செயல்பாடுகள் மற்றும் எதிர்கால செயல்பாடுகள் குறித்து கூறினார் பின்னர் கீழ்க்கண்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1. வரும் மார்ச் 15 உலக நுகர்வோர் தினத்தை அமைப்பின் சார்பில் சிறப்பாக கொண்டாடுவது என்றும் 2. கோத்தகிரி தாலுகா அலுவலகத்தில் செயல்படும் ஆதார் சேவை மையத்தில் பொதுமக்கள் நலன் கருதி கூடுதல் நபரை நியமிக்க வேண்டும் என்றும். 3. குன்னூர் இந்தியன் வங்கி அருகில் லாரி பேட்டை பகுதியில் செயல்படும் கட்டண வாகன நிறுத்தம் இடத்தில் வாகனங்களுக்கு முறையான ரசீது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 4.நீலகிரி மாவட்டத்திற்குள் இயங்கும் 35 கிலோமீட்டர் வரை செல்லும் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணம் மற்றும் கட்டணமில்லா பேருந்து என இரண்டு வகை பேருந்துகள் ஒரே வழித்தடத்தில் செல்வதால் மகளிர் (விடியல்) இலவச பேருந்துகளை அடையாளப் படுத்த வேண்டும் என்றும் அமைப்பின் சார்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கூட்டத்தில் அமைப்பின் ஆலோசகர் பிரவின் அவர்கள் வரவேற்புரை வழங்கினார், செயற்குழு உறுப்பினர்கள் திரைசா, விக்டோரியா , யசோதாசெல்வி, ரோஸ்லின், லெனின் மார்க்ஸ், விபின் குமார் மற்றும் உறுப்பினர்கள் தமிழ்செல்வி, பியூலா பென்ஜமின் , விஜயா உட்பட பலர் கலந்துகொண்டனர் முடிவில் இணை செயலாளர் வினோபா பாப் நன்றி நவின்றார்.
கூடுதல் பணியாளர் நியமிக்கநுகர்வோர் சங்கம் கோரிக்கை

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics