கிருஷ்ணகிரி, மார். 11- கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தந்த
கழக பொதுச் செயலாளர் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிருஷ்ணகிரி திமுக மேற்கு நகர பொறுப்பாளர் என்.அஸ்லம் கிருஷ்ணகிரி கிழக்கு நகர பொறுப்பாளர்
எம்.வேலுமணி ஆகியோர் பொன்னாடை போர்த்தி வாழ்த்துப் பெற்றனர். பொதுக்குழு உறுப்பினர் ஏ.சி.நாகராஜ், காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கே.மகேந்திரன், கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கோவிந்தன், பாப்பாரப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.