தருமபுரி மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்ட தொழிலாளர் சங்க சார்பில் சர்வதேச மகளிர் தின விழா நல்லம்பள்ளியில் உள்ள ராம சூரியா திருமண மண்டபத்தில் சங்க ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் அலமேலு எத்திராஜ் தலைமையில் நடைபெற்றது. நார்த்தம்பட்டி கௌரி, வத்தல்மலை சின்னக்காடு பாப்பம்மாள், கொட்டலாங்காடு பச்சையம்மாள், கொத்தமல்லிகாரன் கொட்டாய் ஈஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க ஒருங்கிணைப்பாளரும், இலளிகம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான பிரதாபன்
மகளிர் தினத்தை குறித்து சிறப்புரையாற்றினார். சங்க ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள் பைசுஅள்ளி மாதையன்,இலளிகம் கிருஷ்ணன், அதகப்பாடி பச்சாகவுண்டர், மாதேமங்கலம் மாதையன், வத்தல்மலை கோவிந்தன், நார்த்தம்பட்டி ராஜி, தடங்கம் மாரியப்பன் மற்றும் திரளான கிராமபுற பெண் தொழிலாளர்கள் கலந்துக் கொண்டு சர்வதேச மகளிர் தினம் குறித்து பேசினார்கள்.
பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தருமபுரி மாவட்டத்திலுள்ள 251 கிராம ஊராட்சிகளில் வேலை அட்டைபெற்ற கிராமப்புற தொழிலாளர்களுக்கை கடந் 2024-நவம்பர்,டிசம்பர்,2025 -ஜனவரி,பிப்பரவரி ஆகிய மாதங்களில் பணி செய்த பணிக்கான தின சம்பளத்தினை சட்டபடி வட்டியுடன் வழங்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.
100 நாள் பணி முடித்த பணித்து பொறுப்பாளர்களை உடனே மாற்ற வேண்டும்.
வேலை அட்டைபெற்ற அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும்.
தருமபுரி மாவட்டத்தில் இருக்கும் பத்து கிராம ஊராட்சிகளை நகராட்சி மற்றும் பேரூராட்சியுடன் இணைக்க வேண்டாம்.
பணி செய்யும் இடத்தில் ஒகேனக்கல் குடிநீர்,நிழல் கூடம்,குழைந்தைகள் பாதுகாப்பு,தகவல் பலகை ஆகியவைகளை ஏற்படுத்த வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் சர்வதேச மகளிர் தின கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ன.